அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்த "பொதுமக்கள் பங்கீடு" பெறுவதில் இருந்து விலக்கு?
அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்த பொது மக்கள் பங்கீடு பெறுவதில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட்டில் பள்ளிக்கல்வி துறைக்கு அதிகபட்சமாக 34 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு, அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்துவதற்கு பொது மக்கள் பங்கீடு அவசியமா என கேட்டார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், அனைத்து விதமான பள்ளிகளுக்கும் பொதுமக்கள் பங்கீட்டு தொகை பெறுவதில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பாக முதலமைச்சரிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றார்.
தொகுதிவாரியாக பள்ளிகள் குறித்து நடத்தப்பட்டு வரும் ஆய்வு முடிவடைந்த பிறகு, பள்ளிகளை தரம் உயர்த்துவது, அரசுப் பேருந்து வசதி தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் பதிலளித்தார்.
Comments